search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூர் அருகே திருவரங்க செல்லியம்மன் திருக்கோவிலில் 18-ம் ஆண்டு பால்குடம் ஊர்வலம்

    • ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-ம் ஆண்டு பால்குடம் ஊர்வலம் இன்று நடைபெற்றது. ஆடி மாதத்தின் 3-வது வெள்ளிக்கிழமை அன்று பால்குடம் ஊர்வலம் இக்கோவிலில் நடைபெறும்.

    இதன்படி இக்கோவிலில் இன்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக பெருமாள் கோவிலில் இருந்து அருள்மிகு திருவரங்க செல்லியம்மனுக்கு தாய் வீட்டு சீதனமான மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு, பூ, பழம், வளையல், இனிப்பு, காரம், புது துணி உள்ளிட்டவை கொண்டு வந்து செலுத்தும் நிகழ்ச்சியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத அருள்மிகு அழகிய சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் பஜனை கோவிலை வந்து அடைந்தது.

    இதையடுத்து பால் குடத்துடன்-தாய் வீட்டு சீதனத்தையும் பக்தர்கள் இந்த ஊராட்சியில் உள்ள மாட வீதிகள் மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று அருள்மிகு திருவரங்க செல்லியம்மன் ஆலயத்தில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொண்டு வந்த பாலை மூலவருக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூலவருக்கு அலங்காரம் மகா தீபராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிகளில் இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை கிராம மக்களும், விழா குழுவினர்களும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×