என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேனி திட்டக்குழு தேர்தலில் ஓ.பி.எஸ். தம்பி தோல்வி
- ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.
தேனி:
தேனி மாவட்ட திட்டக்குழுவில் மொத்தம் 12 உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஊரக பகுதியில் இருந்து 5 உறுப்பினர்கள், நகர பகுதியில் இருந்து 7 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஊரக பகுதிக்கு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்களில் இருந்தும், நகர பகுதிக்கு நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களில் இருந்தும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 உறுப்பினர்கள் தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. இதில் நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்கள் 511 பேர் வாக்களிக்க வேண்டும்.
தி.மு.க. சார்பில் 7 பேர் ஒரு அணியாகவும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியும், பெரியகுளம் நகர்மன்ற கவுன்சிலருமான சண்முகசுந்தரம் தலைமையில் 7 பேர் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர்.
எதிர் அணியில் தினகரன் என்பவர் 329 வாக்குகள் பெற்று அந்த அணியை சேர்ந்த 7 பேரும் வெற்றி பெற்றனர். ஓ.பி.எஸ். தம்பியான சண்முகசுந்தரம் அணி 95 வாக்குகள் மட்டுமே பெற்று அவர் உள்பட அந்த அணியினர் தோல்வி அடைந்தனர்.






