search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட 2-வது உள்நாட்டு முனையம்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
    X

    சென்னை விமான நிலையத்தில் மாற்றி அமைக்கப்பட்ட 2-வது உள்நாட்டு முனையம்: அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

    • பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் புதிய ஒருங்கிணைந்த வெளிநாட்டு முனையம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இதில் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் இருந்து முழு அளவில் விமான சேவைகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதையடுத்து விமான நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்ட பழைய சர்வதேச விமான முனையம் மூடப்பட்டது.

    விமானநிலையத்தில் தற்போது உள்நாட்டு முனையத்தில் 2-வது தளத்தில் புறப்பாடு பகுதியும் கீழ் தளத்தில் வருகை பகுதியும் செயல்பட்டு வருகிறது. உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பழைய சர்வதேச வெளிநாட்டு முனையத்தை, 2-வது உள்நாட்டு முனையமாக மாற்ற விமான நிலைய இயக்குனரகம் முடிவு செய்தது.

    அதன்படி பழைய வெளிநாட்டு முனையமான டி-4 பகுதியில் தற்பொழுது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதில் இருந்த குடியுரிமை பரிசோதனை கவுண்டர்கள் அகற்றப்பட்டு உள்ளன. அதேபோல் கன்வேயர் பெல்ட் அங்கு மாற்றப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி முனையத்தை சுத்தம் செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த 2-வது உள்நாட்டு முனையத்தின் பணிகளை விரைந்து முடித்து அடுத்த மாதத்தில் (அக்டோபர்) திறக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். சென்னை விமான நிலையத்தில் 2-வது உள்நாட்டு முனையம் திறக்கப்பட்டால் பயணிகள் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். மேலும் பயணிகளும் வெகு நேரம் காத்திருக்காமல் எந்த முனையத்தில் எந்த விமானம் இயக்கப்படுகிறது என்று எளிதாக கண்டு பிடித்து செல்லலாம்

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, சென்னை விமான நிலையத்தில் 2 உள்நாட்டு முனையம் செயல்பாட்டில் இருக்கும்போது உள்நாட்டு பயணிகளின் கூட்டத்தை எளிதில் கையாள முடியும். பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியது இல்லாமல் தாங்கள் செல்ல வேண்டிய விமானத்திற்கு எளிதில் செல்லலாம். தற்பொழுது டி-1 முனையத்தில் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், அடாஸ்கா போன்ற விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும். டி-4 முனையத்தில் இருந்து ஏர் இந்தியா, ஏர் ஏசியா, விஸ்தாரா ஆகிய விமான நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படும் என்றனர்.

    Next Story
    ×