என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர் தகுதி தாள்-2 தேர்வு எப்போது?: அதிகாரிகள் விளக்கம்
- தாள்-1-ல் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், தாள்-2-ல் வெற்றி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் தகுதி பெறுவார்கள்.
- தாள்-1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், 2-ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர்.
சென்னை:
இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிகளில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாள்-1, தாள்-2 என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தாள்-1-ல் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், தாள்-2-ல் வெற்றி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் தகுதி பெறுவார்கள்.
அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் தாள்-1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், 2-ம் தாள் தேர்வுக்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர். முதல் தாள் தேர்வு கடந்த மாதம் (அக்டோபர்) 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை கணினி வாயிலாக நடத்தி முடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2-ம் தாள் தேர்வு எப்போது நடைபெறும்? அதுதொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில் ஆசிரியர் தகுதி தாள்-2 தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.






