என் மலர்

  தமிழ்நாடு

  பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது
  X

  பள்ளி வகுப்பறையில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை- ஆசிரியர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளியில் நடந்த கராத்தே வகுப்புக்கு செல்லாமல் மாணவி மட்டும் தனியாக வகுப்பறையில் இருந்தார்.
  • மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வரும் தனது தாயிடம் தெரிவித்தார்.

  பொன்னேரி:

  பொன்னேரி அருகே தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு பெரும்பேடு பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மாணவியின் தாயும் ஆசிரியராக உள்ளார்.

  இந்த நிலையில் பள்ளியில் நடந்த கராத்தே வகுப்புக்கு செல்லாமல் மாணவி மட்டும் தனியாக வகுப்பறையில் இருந்தார். அப்போது சமூகஅறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வரும் ஆரோக்கிய ராஜ் வகுப்பறைக்கு வந்தார்.

  மாணவி மட்டும் தனியாக இருப்பதை கவனித்த அவர் பேச்சு கொடுத்தார். திடீரென அவர் மாணவியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்ததால் ஆசிரியர் ஆரோக்கியராஜ் அங்கிருந்து சென்று விட்டார். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.

  இந்தநிலையில் மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அதே பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வரும் தனது தாயிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அவர் அதிர்ந்து போனார்.

  இதுகுறித்து பொன்னேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. பழவேற்காட்டில் மறைந்திருந்த ஆசிரியர் ஆரோக்கிய ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

  Next Story
  ×