என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வரி கட்டிய ஆம்னி பேருந்துகள் நாளை விடுவிக்கப்படும்- போக்குவரத்து ஆணையர்
- பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி.
- வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற அவகாசம்.
விதிமுறைகள் மீறல், கூடுதல் கடட்ண வசூல் உள்ளிட்ட புகாரில் 120 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
இந்நிலையில், வரி கட்டிய பேருந்துகள் மட்டும் நாளை விடுவிக்கப்படும் என போக்குவரத்துத் தறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பேருந்துகளை விடுவிக்க போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளிமாநில பதிவு எண் கொண்ட அனைத்து ஆம்னி பேருந்துகளையும், 2 மாதங்களில் தமிழ்நாடு பதிவு வாகனங்களாக மாற்ற வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Next Story






