என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் கவிஞர் பாரதிதாசன் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்
    X

    சென்னையில் கவிஞர் பாரதிதாசன் ரோடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்

    • டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கடந்த 5-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது.

    மேலும் இன்று (12-ந்தேதி) முதல் அடுத்த மூன்று வருடத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.

    அதன்படி டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை அல்லது சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம்.

    டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி. ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லலாம்.

    லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×