என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோடை வெயிலை முன்னிட்டு ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள விடுமுறை நாட்களில் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுகின்றனர்.
- அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
ஏற்காடு:
கோடை காலம் தொடங்கியதை அடுத்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள விடுமுறை நாட்களில் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு படையெடுகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான, ஏற்காட்டிற்கு விடுமுறை நாடகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம்.
தற்போது கோடை வெயிலை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிகிறார்கள். ஏற்காட்டில் குளர்ச்சியான உடல் நிலை ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்தனர். சுற்றுலா பயணிகள் அண்ணா பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து பூக்கள் மற்றும் இயற்கை காட்சிகளை ரசித்தனர். இங்குள்ள ஊஞ்சலில் விளையாடி மகிழ்ந்தனர். இங்குள்ள மலர் செடிகளை பெண்கள் தங்கள் வீட்டில் வளர்ப்பதற்காக ஆர்வமுடன் வாங்கினர்.
லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்ப கூடிய படகு இல்லத்தில், நீண்ட நேரம் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






