என் மலர்

  தமிழ்நாடு

  தூத்துக்குடியில் இன்று அதிகாலை மீன் வியாபாரியை தாக்கி ரூ.3½ லட்சம் கொள்ளை
  X

  தூத்துக்குடியில் இன்று அதிகாலை மீன் வியாபாரியை தாக்கி ரூ.3½ லட்சம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மீனவர்கள் படகில் பிடித்துவந்த மீன்களை ஏலம்விடும் பணி நடைபெற்றது.
  • மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி அதனை சுந்தர் ஏலம்விட்டார்.

  தூத்துக்குடி:

  தூத்துக்குடி தாமஸ்நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது50). மீன் வியாபாரி. இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை ஏலம்விடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  நேற்று இரவு ஏராளமான மீனவர்கள் படகில் பிடித்துவந்த மீன்களை ஏலம்விடும் பணி நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான வியாபாரிகள் பங்கேற்றனர்.

  மீனவர்களிடம் இருந்து மீன்களை வாங்கி அதனை சுந்தர் ஏலம்விட்டார். பின்னர் ஏலப்பணம் ரூ. 3½ லட்சத்துடன் இன்று அதிகாலை வீடு திரும்பினார்.

  அவர் மீன்பிடி துறைமுகம் அருகே சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அவரை வழிமறித்தனர். பின்னர் சுந்தரை தாக்கி அவரிடம் இருந்து ரூ. 3½ லட்சம் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடினர்.

  இது தொடர்பாக சுந்தர் தென்பாகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து மர்மவாலிபர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Next Story
  ×