என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடு வராது
- சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டு மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி.ஆகும்.
- கோடைக்காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் மூலமும், கடலூர் மாவட்டம் வீராணம் ஏரிகள் மூலமும் சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
சென்னை குடிநீர் வழங்கும் ஏரிகளின் ஒட்டு மொத்த கொள்ளளவு 13.2 டி.எம்.சி.ஆகும்.
இதில் தற்போது 8.80 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு இதே நாளில் 8.77 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.
எனவே இந்த நீரை வைத்து கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில் குடிநீர் வாரியம் உள்ளது. எனவே இந்த கோடைக்காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது.
பூண்டி ஏரியில் தற்போது 1442 மில்லடன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதற்கிடையே பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு நீரை அனுப்பும் பணிகளை நீர்வளத்துறையினர் தொடங்கி உள்ளனர்.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 225 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. செம்பரம்பாக்கத்தில் 2950 மில்லியன் கன அடி நீரும், புழல் ஏரியில் 2401 மில்லியன் கன அடி நீரும், சோழவரத்தில் 806 மில்லியன் கன அடி நீரும், தேர்வாய கண்டிகையின் 483 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.






