என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரக்கோணம் அருகே சென்னை வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்குதல்- போலீசார் கடும் எச்சரிக்கை
- தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
- வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரக்கோணம்:
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு வந்தது.
அரக்கோணம் அருகே மகேந்திரவாடி, அன்வர்திகான் பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்மநபர்கள் ரெயில் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் டி-6 பெட்டியில் 75 மற்றும் 76 இருக்கை கண்ணாடிகள் உடைந்து விரிசல் ஏற்பட்டது.
இந்த தாக்குதலில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் ரெயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசியவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வீடுத்துள்ளனர்.






