search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவுன்சிலிங் வந்த பெண்களை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளிய கில்லாடி பெண்
    X

    கவுன்சிலிங் வந்த பெண்களை ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளிய "கில்லாடி பெண்"

    • திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்ச தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    சேலம்:

    சேலம் மாநகரில் கடந்த சில மாதங்களாக விபசாரம் அதிக அளவில் கொடி கட்டி பறப்பதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு பரபரப்பு புகார்கள் சென்றது .

    இதையடுத்து சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவின் பேரில் போலீசார் மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதையடுத்து அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி உள்பட பல பகுதிகளில் விபசாரம் நடப்பதாக கூறப்பட்ட வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பெண்கள் 20 பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதில் முக்கிய நபர்களான சேலம் மாவட்டம் பூலாவரி ஏர்வாடி பகுதியை சேர்ந்த தியாகராஜன் (31) மற்றும் சேலம் ஜாகீர் அம்மாபாளைம் பொன்நகர் பகுதியை சேர்ந்த திவ்யா (36 ) ஆகியோர் ஜாகீர் அம்மாபாளையம் மற்றும் காசக்காரனூர் பகுதிகளில் வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடந்த 20-ந் தேதி திருவாக்கவுண்டனூர் அருகே சென்று கொண்டிருந்த சிலரிடம் நெடுஞ்சாலை நகரில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று தியாகராஜன் அழைத்து உள்ளார்.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் தியாகராஜன் மற்றும் திவ்யா உள்பட சிலர் சேர்ந்து அந்த பகுதியில் 2 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யபபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் விபசார தொழிலில் மூலகாரணமாக செயல்பட்ட தியாகராஜன் மற்றும் திவ்யா ஆகியோர் அப்பாவி பெண்களை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக கூறி சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் உள்ள 2 பேரிடமும் அதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

    இதற்கிடையே போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது அதன் விவரம் வருமாறு-

    ஓமலூர் பகுதியை சேர்ந்த திவ்யா சுகாதாரத்துறையின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் இயங்கும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவில் தற்காலிக ஆலோசாகராக பணி புரிந்து உள்ளார். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த அவர் பின்னர் ஓமலூருக்கு இடமாறுதலாகி சென்றார்.

    அப்போது விபசாரத்தில் ஈடுபட்டு ஆஸ்பத்திரிக்கு கவுன்சிலிங்கிற்கு வரும் பெண்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

    மேலும் எய்ட்ஸ் பாதித்தவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் அதற்கு தேவையான மருந்து மாத்திரைகளை ரத்தத்தை பரிசோதனை செய்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். மேலும் கர்ப்பிணி பெண்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை கட்டாயம் என்பதால் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இந்த மையங்களுக்கு வந்து பரிசோதனை செய்து கொள்வது வழக்கம்.

    அதன்படி கவுன்சிலிங்குக்கு வந்த ஏராளமான பெண்களின்அறிமுகம் அவருக்கு கிடைத்தது. அப்போது அவர்களிடம் இனிக்க இனிக்க பேசும் திவ்யா நான் சொல்வதை கேட்டால் நீங்கள் ஏழ்மையில் இருந்து மீண்டு பல லட்சம் சம்பாதிக்கலாம், வசதியாக கார், பங்களா என்று வாழலாம் என்று கூறி மயக்கி உள்ளார்.

    இதனை நம்பிய பெண்களை தனது வலையில் வீழ்த்தி புரோக்கர்கள் மூலம் முக்கிய நபர்களுக்கு அனுப்பி உள்ளார். அதன்படி சேலம், நாமக்கல், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி என பாலியல் தொழில் தொடர்பான கவுன்சிலிங்கிற்கு வந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களை 6 மாவட்டங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பியது தெரிய வந்தது.

    மேலும் வறுமையில் வாடிய கர்ப்பிணி பெண்களின் போட்டோக்களை தொழில் அதிபர்கள் மற்றும் அதிகாரிகள் உள்பட வசதி படைத்தவர்களுக்கு ஆன்லைனில் அனுப்பி தங்களது வலையில் வீழ்த்தி தொழிலை விரிவு படுத்தி உள்ளார். இதன் மூலம் திவ்யா மற்றும் அவரது கூட்டாளிகள் பல லட்சங்களை அள்ளியதும் இதன் மூலம் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும், பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்ததும் தெரிய வந்தது. இதற்கு அவரது கணவரான மாநகராட்சி ஊழியரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் ஒரே நாளில் பலருக்கு ஒரு பெண்ணை அனுப்பி அதிக அளவில் பணத்தை சம்பாதித்து விட்டு ஒரு சிறிய தொகையை மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வழங்கி வந்ததும் தெரிய வந்தது. தொடர் விசாரணை மூலம் இந்த சம்பவங்கள் அறிந்த போலீசாரே திகைத்து உள்ளனர். இதையடுத்து தான் அவர்களிடம் இருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் திவ்யா உள்பட 2 பேரும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதால் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

    Next Story
    ×