என் மலர்

  தமிழ்நாடு

  பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதத்தால் 75 ஆயிரம் மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு- ராமதாஸ் கண்டனம்
  X

  பெரியார் பல்கலைக்கழக தேர்வுகள் தாமதத்தால் 75 ஆயிரம் மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதில் பாதிப்பு- ராமதாஸ் கண்டனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெரியார் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை.
  • பெரியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் தாமதம் ஆவதற்கு பல்கலைக் கழக நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.

  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  பெரியார் பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 115 கல்லூரிகளில் வரும் 17-ந் தேதி தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுகள் 25-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. ஜூன் 16-ந் தேதி நிறைவடையவுள்ள இத்தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட பெரும் பான்மையான பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் கடந்த மாதமே நிறைவடைந்துவிட்டன. அவற்றின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்குள்ளாக பெரியார் பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை.

  அதனால், அந்த பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் பயிலும் சுமார் 75 ஆயிரம் மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும்.

  பெரியார் பல்கலைக் கழகத் தேர்வுகள் தாமதம் ஆவதற்கு பல்கலைக் கழக நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும்.

  பெரியார் பல்கலைக் கழக நிர்வாகத்தின் தவறு மற்றும் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படு வதை அனுமதிக்கக் கூடாது.

  தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு வசதியாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  Next Story
  ×