search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை-புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
    X

    கோப்பு படம்

    சென்னை-புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

    • காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில் பலத்த மழை பெய்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    சென்னை மாநகர பகுதிகளான எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், மாதவரம், மூலக்கடை, கோயம்பேடு, அண்ணாநகர், சூளைமேடு, அரும்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    மாதவரத்தை அடுத்துள்ள வடபெரும்பாக்கம், வடகரை, விளாங்காடு பாக்கம், புழல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதே போன்று ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், கோவிலம்பாக்கம், பரங்கிமலை, போரூர், மதுரவாயல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    இதனால் இன்று காலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சீதோஷ்ண நிலை மாறியது. காலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் நடைபயிற்சியை மேற்கொண்டிருந்தவர்கள் சாரல் மழையில் நனைந்தபடியே நடைபயிற்சியை தொடர்ந்தனர். அலுவலகங்களுக்கு சென்றவர்கள் மழையில் நனைந்த படியே மோட்டார் சைக்கிளில் பயணித்ததையும் காண முடிந்தது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பெய்த மழையால் காலை நேரத்தில் மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகள் மழையில் நனைந்தபடியே பொருட்களை வாங்கி சென்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் எதிரொலித்தது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அவர்கள் மழை காரணமாக பாதிப்பையும் சந்தித்தனர்.

    Next Story
    ×