search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கணவருடன் மெரினாவுக்கு காற்று வாங்க சென்று விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்- உருக்கமான தகவல்கள்
    X

    கணவருடன் மெரினாவுக்கு காற்று வாங்க சென்று விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்- உருக்கமான தகவல்கள்

    • நேப்பியர் பாலம் அருகில் வைத்து கடற்படை வாகனம் மோதியதில் லலிதா உயிரிழந்தார். இதில் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது.
    • விபத்து குறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சென்னை:

    சென்னையில் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சிவா ரெட்டி. பல்லவன் சாலையில் உள்ள கடற்படை அதிகாரிகள் குடியிருப்பில் இளம் மனைவியான லலிதாவுடன் நேற்று மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார்.

    8 மாத கர்ப்பிணியாக இருந்த லலிதா மெரினாவுக்கு சென்று காற்று வாங்கி விட்டு வரலாம் என கணவரிடம் கூறியுள்ளார். இதை தொடர்ந்தே சிவா ரெட்டி மனைவியை மெரினாவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பொழுதை போக்கிய இருவரும் பின்னர் மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினர்.

    நேப்பியர் பாலம் அருகில் வைத்து கடற்படை வாகனம் மோதியதில் லலிதா பரிதாபமாக உயிரிழந்தார். இதில் வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ரத்னவேல் பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கடற்படை வாகன டிரைவரை கைது செய்தனர்.

    கர்ப்பிணி பெண்ணான லலிதா உயிரிழந்தது தொடர்பாக உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன. கடற்படை அதிகாரியான சிவா ரெட்டி ஆந்திராவை சேர்ந்தவர். கர்ப்பிணி மனைவி லலிதா மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த சிவா ரெட்டி குழந்தை பிறக்கப்போகும் நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்.

    இதற்காக மனைவிக்கு மருத்துவ பரிசோதனைகளை தவறாமல் செய்து வந்த சிவா ரெட்டி மனைவி லலிதாவை அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் தவறாமல் அழைத்துச் சென்றுள்ளார். அந்த வகையில் நேற்று மாலையில் மெரினாவுக்கு சென்று வரலாம் என்று கூறியுள்ளார்.

    இதைத் தொடர்ந்து மனைவி லலிதாவை ஆசையுடன் மெரினாவுக்கு அழைத்துச் சென்று பொழுதை போக்கி விட்டு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போதுதான் கடற்படை வாகனம் மோதி லலிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    ஆசை மனைவியும், வயிற்றில் இருந்த குழந்தையும் கண் இமைக்கும் நேரத்தில் விபத்தில் பலியானதால் அதிகாரி சிவா ரெட்டி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் கண்ணீர் மல்க காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். அவரை உறவினர்கள் தேற்றி வருகின்றனர்.

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் லலிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு கணவர் சிவா ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் லலிதாவின் உறவினர்களும், தோழிகளும் கண்ணீர் மல்க காத்திருக்கிறார்கள்.

    Next Story
    ×