என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அம்மாபேட்டை அருகே இன்று காலை குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
- குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
- பொதுமக்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளித்திருப்பூர் ஊராட்சி பெரிய குருநாதசாமி கோவில் சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் கிடைக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கைவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 9 மணி அளவில் குருவரெட்டியூர் -வெள்ளித்திருப்பூர் ரோட்டில் பெரிய குருநாதசாமி கோவில் அருகில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த வெள்ளித் திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்ற மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






