என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பி.எஸ்.-சபரீசன் சந்திப்பால் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது: டி.ஜெயக்குமார் கலாய்ப்பு
    X

    ஓ.பி.எஸ்.-சபரீசன் சந்திப்பால் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது: டி.ஜெயக்குமார் கலாய்ப்பு

    • எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்ற கேள்வி எழுந்தபோது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய்ந்தார்கள்.
    • சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த சபரீசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து இருவரும் பேசினார்கள்.

    சென்னை:

    ஓ.பன்னீர்செல்வத்தை தி.மு.க.வின் பி டீம் என்று ஆரம்பத்தில் இருந்தே அ.தி.மு.க.வினர் விமர்சித்து வருகிறார்கள். அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க. அரசை பலமுறை அவர் பாராட்டி இருக்கிறார். சட்டசபையிலேயே கருணாநிதியையும் பாராட்டி இருக்கிறார்.

    இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமியா? ஓ.பன்னீர்செல்வமா? என்ற கேள்வி எழுந்தபோது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கமே சாய்ந்தார்கள்.

    இந்த நிலையில்தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு வந்த சபரீசனை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து இருவரும் பேசினார்கள். இருவரும் அருகருகே அமர்ந்து போட்டியையும் பார்த்தனர்.

    இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவியது.

    இந்த வீடியோ வெளியானதும் ஓ.பன்னீர்செல்வத்தை கலாய்த்து அ.தி.மு.க. தரப்பில் இருந்து டி.ஜெயக்குமார் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பூனைக்குட்டி வெளியே வந்தது. சபரீசனுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ளார். அதே போல் சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக தன்னை மாற்றுமாறு அந்த நிறுவனத்துடன் சண்டையும் போட்டுள்ளார் என்றும் கலாய்த்துள்ளார்.

    Next Story
    ×