search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது- உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு
    X

    இந்திய குடிமகனாக இல்லாதவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க கூடாது- உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு

    • ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.
    • தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் ராஜா ராமன் காணொலி காட்சி மூலம் மாவட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அதில் கீழ்க்கண்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு:-

    நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி/சேலைகள் பி.ஓ.எஸ். இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

    நியாய விலைக்கடைகளில் எக்காரணத்தை கொண்டும் இருப்பு வைத்துக்கொண்டு விநியோகிக்காமல் இருக்க கூடாது.

    நியாய விலைக்கடை திறக்கப்பட வேண்டிய நாட்களில் சரியாக காலை 9 மணிக்கு திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

    ஆதாருடன் வங்கி கணக்கை இணைக்காத நபர்களை நேரிடையாக வங்கியில் சென்று இணைத்திட உரிய அறிவுரைகள் வட்ட வழங்கல் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட வேண்டும்.

    தொடர்ந்து எந்த பொருட்களும் விநியோகம் செய்யாமல் கடை திறக்காமல் உள்ள நியாய விலைக்கடைகளை கண்காணித்து கடை திறந்து விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

    இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்குதல் கூடாது.

    நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் என்.எப்.எஸ்.ஏ. மற்றும் மாநில ஒதுக்கீடு குடும்ப அட்டைகளுக்கு தனித்தனியாக பில் போடுவதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

    ஒரே நபர் வெளிமாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்திருந்து பொருட்களை பெறும் நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதிகாரிகளுக்கு மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதனை கள விசாரணை செய்து அறிக்கை அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×