search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லியில் இன்று சமூக நீதிக்கான தேசிய மாநாடு

    • பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.

    சென்னை:

    சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு டெல்லி இந்தியா கேட் அருகில் இன்று மாலை 4.30 முதல் 7 மணிவரை நடை பெறுகிறது.

    இந்த மாநாட்டில், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் 24 கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் நேரிலும், காணொலி வாயிலாகவும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த மாநாட்டில் சமூக நீதிக்கான அகில இந்தியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான வி.ஈஸ்வரய்யா வரவேற்கிறார். ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யுமான பி.வில்சன் முதன்மை உரையாற்றுகிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணாலி வாயிலாக தலைமை உரையாற்றுகிறார்.

    சிறப்பு விருந்தினர்களாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லா, அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரைன், தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் மகாராஷ்டிரா துணை முதல்வருமான சஜன் சந்திரகாந்த் புஜ்பால், ஆம் ஆத்மி கட்சி சஞ்சய் சிங், பீகார் ராஷ்ட்ரிய ஜனதாதள எம்.பி. மனோஜ் குமார் ஜா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான இ.டி.முகமது பஷீர், பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டாக்டர் கே.கேசவ ராவ், ராஷ்ட்ரிய சமாஜ்பக் தேசியத் தலைவரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சருமான மகாதேவ் ஜன்கர், அசாமைச் சேர்ந்த எம்.பி. நபா குமார் சாரானியா, அரியானா லோக்தந்திர சுரக் ஷா கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ராஜ் குமார் சயினி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    மேலும் இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., மனிதநேய மக்கள்கட்சி தலைவர் எம்.எச். ஜவஹிருல்லா எம்.எல்.ஏ., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ., தவாக தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டை இணையதளம் மூலம் (https://bit.ly/aifsojconference) நேரலையில் காணலாம்

    Next Story
    ×