என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடியாக குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடியாக குறைந்தது

    • கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது.
    • மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணை மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள், கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதுதவிர ஏராளமான கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பியது. பின்னர் மழை நின்றதால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்றுகாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 93.40 அடியாக குறைந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 6 ஆயிரத்து 416 கனஅடியாக குறைந்தது. மேலும் அணையில் இருந்து டெல்டாவுக்கு 15 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 56.62 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×