என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 893 கன அடியாக சரிவு
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
சேலம்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஒகேனக்கல், அஞ்செட்டி, நட்ராம்பாளையம், அடிபாலாறு உள்பட பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று மழை குறைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கி உள்ளது. நேற்று 15 ஆயிரத்து 433 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று பாதியாக சரிந்து 8 ஆயிரத்து 893 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது.
கடந்த 10-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30.99 அடியாக இருந்த நிலையில் படிப்படியாக உயர்ந்து இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42.44 அடியாக உயர்ந்தது. இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 11.45 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






