என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை
    X

    மேலூர் அருகே இன்று மதியம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரை வழிமறித்து வெட்டிக்கொலை

    • பட்டப்பகலில் 4 வழிச் சாலையில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    சிவகங்கை மாவட்டம் கட்டாணிபட்டியை அடுத்து உள்ள பொன்குண்டுபட்டி கிராமத்ைத சேர்ந்தவர் கண்ணன் (வயது 55). இவர் இன்று மதியம் வேலை நிமித்தமாக மதுரை மாவட்டம் மேலூருக்கு புறப்பட்டார். மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்தபோது கருப்பு நிற கார் பின்தொடர்ந்து வந்தது.

    ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென அந்த கார் கண்ணனை மறித்தது. காரில் இருந்து அரிவாள், வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய மர்ம நபர்கள் கண்ணனை கீழே தள்ளி சரமாரியாக வெட்டினர். உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    உயிருக்கு போராடிய கண்ணனை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்த மேலூர் டிஎஸ்.பி. ஆர்லியன்ஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர்.

    பட்டப்பகலில் 4 வழிச் சாலையில் மர்ம நபர்கள் அரங்கேற்றிய இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    முன்விரோதம் காரணமாக கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×