என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பொன்னேரி அருகே டெங்கு காய்ச்சல் பரவிய கிராமத்தில் மருத்துவ முகாம்
- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
- காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில் வசித்தவர்கள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காய்ச்சல் பரவி வந்தது. பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதைத் தொடர்ந்து சுகாதாரப்பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாக சென்று பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், நீண்ட நாட்களாக தேங்கி நின்ற தண்ணீரை அகற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காய்ச்சல் பரவிய பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தெரிவித்தார்.






