search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குண்டும் குழியும் சேறும் சகதியுமாகி மாட்டு வண்டி கூட செல்ல முடியாத மடிப்பாக்கம் சாலைகள்
    X

    குண்டும் குழியும் சேறும் சகதியுமாகி மாட்டு வண்டி கூட செல்ல முடியாத மடிப்பாக்கம் சாலைகள்

    • ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள்.
    • ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    மடிப்பாக்கம், ராம்நகர் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது தண்ணீர்தான். மழை வந்தால் தண்ணீர் தேங்கும் என்பது தான்.

    ஆனால் இப்போது இந்த பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் வடிகால் ஓடை மற்றும் பாதாள சாக்கடை கால் வாய்கள் அமைக்கப்படுகிறது.

    ஒரே நேரத்தில் இரண்டு பணிகளுக்காகவும் சாலைகளை தாறுமாறாக தோண்டி போட்டுள்ளார்கள். பல மாதங்களாக இந்த பணிகள் நடந்து வருவதால் தெருக்களில் இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முடியவில்லை. ராம்நகர், மடிப்பாக்கம், குபேரன்நகர், மகாலெட்சுமி நகர், குபேரன் நகர் விரிவு உள்பட எல்லா பகுதிகளிலும் 25-க்கும் மேற்பட்ட தெருக்களில் சாலைகள் இதே நிலையில் தான் உள்ளன.

    கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழையில் இந்த சாலைகளில் கிடக்கும் குண்டுகளில் நீர் நிரம்பியும், தோண்டி போடப்பட்டிருக்கும் மண்குவியல்கள் சகதியுமாகி நடந்தும் செல்ல முடியாத நிலையில் உள்ளது.

    பணிகளை செய்ய வேண்டியது அவசியம். அடர்த்தியான குடியிருப்பு பகுதி என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு விரைவாக செய்து முடிக்க வேண்டும் என்கிறார்கள் குடியிருப்புவாசிகள். மாட்டு வண்டிகள் கூட செல்ல முடியாத சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுதான் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

    மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, இந்த பகுதியில் மிகப்பெரிய திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ வாட்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து பணிகளை விரைந்து முடிக்கவும் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் அறிவுறுத்தி இருக்கிறோம். பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் 124 சாலைகளில் 40 சாலைகளில் நடைபெறும் பணிகள் இன்னும் 3 நாட்களில் முழுமையாக முடிவடையும் என்றார்.

    இந்த பகுதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து பருவமழை தொடங்குவதற்குள் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துடன் இணைத்துவிட திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுவரை 800 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவும் மேலும் 592 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்காலிகமாக பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க மண்டலங்களுக்கு ரூ.20 லட்சம் அவசர நிதியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வார்டிலும் இதற்காக வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த கமிட்டி பரிந்துரைக்கும் சாலைகளை உடனடியாக பார்வையிட்டு சீரமைக்க டெண்டர் விடவும் மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    Next Story
    ×