என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது... மீனவர்களுக்கு எச்சரிக்கை...
- தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதற்கடுத்த 48 மணிநேரத்தில் புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து ஒரு சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது.
இதனால் டிசம்பர் 2-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்ற மீனவர்கள் டிசம்பர் 1-ந்தேதிக்குள் கரைக்குத் திரும்ப வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்பும், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






