search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 5-வது நாளாக நீடிக்கும் பலத்த மழை
    X

    சென்னையில் 5-வது நாளாக நீடிக்கும் பலத்த மழை

    • குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது.
    • இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தெளிய விட்டு தெளிய விட்டு போட்டு தாக்குகிறது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    புறநகர் பகுதியிலும் மழை வெளுத்து கட்டுவதால் சென்னையின் நீர் ஆதாரங்களான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர் தேக்கங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த குடிநீர் ஏரிகளில் கடந்த 31-ந்தேதி நிலவரப்படி 6,629 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இன்றைய நிலவரப்படி 7 ஆயிரத்து 224 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னைக்கு ஒரு மாதத்துக்கு தேவையான தண்ணீர் கடந்த 3 நாட்களில் பெய்த மழையால் கிடைத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி பதிவான மழை அளவு வருமாறு:-

    தண்டையார்பேட்டை-14 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம், கோவை, மேட்டுப்பாளையம்-12 செ.மீ., பெரம்பூர், வேதாரண்யம், காயல்பட்டினம்-10 செ.மீ.

    கயத்தாறு, கடம்பூர், சென்னை கலெக்டர் அலுவலகம்-8 செ.மீ., அயனாவரம், அண்ணா பல்கலைக்கழகம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், ரெட்ஹில்ஸ், கடலூர் கலெக்டர் அலுவலகம்-7 செ.மீ., கோடியக்கரை, நாங்குனேரி, விருதுநகர், திருத்துறைப்பூண்டி, ஆவடி பேச்சிப்பாறை-6 செ.மீ., தூத்துக்குடி, திருக்கோவிலூர், பரணியார், நத்தம், திருவாலங்காடு-5 செ.மீ., மதுரை, துவாக்குடி, தாம்பரம், பாளையங்கோட்டை, அதிராம்பட்டினம், சிவகிரி, கொரட்டூர், வில்லிவாக்கம்-4 செ.மீ.

    Next Story
    ×