என் மலர்

  தமிழ்நாடு

  கடனை திருப்பி செலுத்தாததால் தாராபுரத்தில் அரசு பள்ளி ஜப்தி- மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி
  X

  கடனை திருப்பி செலுத்தாததால் தாராபுரத்தில் அரசு பள்ளி 'ஜப்தி'- மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது.
  • கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  தாராபுரம்:

  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினர். இதற்காக பள்ளியின் இடத்தை ஈடாக கொடுத்து இருந்தனர்.

  இந்தநிலையில் நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை செலுத்தாததால் பள்ளி இடத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

  இதையடுத்து கோர்ட்டு அமீனா தாராபுரம் வந்து பள்ளியை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.

  இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×