search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்
    X

    மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை தேவை: ஜி.கே.வாசன்

    • சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் தற்பொழுது சம்பா, தாளடி பயிர்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடி, வடபாதி அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மின் மோட்டார் மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி செய்துள்ளனர். மேலும் சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளார்கள்.

    விவசாயத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு போர்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களை காக்க வேண்டும். அதோடு தற்பொழுது வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×