search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி கட்டிடம் கட்ட அனுமதி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை
    X

    சென்னை மாநகராட்சி கட்டிடம் கட்ட அனுமதி கட்டண உயர்வை குறைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

    • வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை விட தற்பொது இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.
    • மக்களை பாதிக்காதவாறு அவற்றை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னையில் 1000 சதுர அடிக்கு மேல் வீடு கட்ட அனுமதி கட்டணம் 100 சதவீதம் உயர்த்தி இருக்கிறது. தமிழக அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என்று உயர்த்திகொண்டே போகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி கட்டணத்தை 100 மடங்கு உயர்த்தி அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

    அதாவது வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், தொழிற்சாலைகளின் தளபரப்பு குறியீட்டில் 100 சதுர மீட்டருக்கு (1076அடி) மேல் கட்டிட பரப்பு இருந்தால் கட்டிடங்களுக்கான அனுமதி கட்டணம் 100 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொருத்தவரை 1 முதல் 40 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ90, தற்பொது ரூ.180, 41 முதல் 100 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.155, தற்பொழுது ரூ.310, 101 முதல் 400 சதுர மீட்டர் வரை 10 சதுர மீட்டருக்கு ரூ.410, தற்பொழுது ரூ.820, 401 சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேல் 10 சதுர மீட்டருக்கு ரூ.1,050 தற்பொழுது ரூ.2,100 என உயர்ந்து இருக்கிறது.

    அதுபோல் வணிகம் மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை விட தற்பொது இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கிணறு, குடிநீர் தொட்டி போன்றவற்றிற்கான கட்டணம், சுற்றுச்சுவருக்கான அனுமதி கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுமென்மேலும் மக்களின் மீது சுமையை ஏற்றுவதாகவே உள்ளது. மாநகராட்சி வருமானத்தை பெருக்க உயர்த்திய கட்டணத்தை மறுபரிசீலனை செய்து, மக்களை பாதிக்காதவாறு அவற்றை குறைத்து நிர்ணயிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×