என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு மருத்துவமனையை சூழ்ந்த வெள்ளம்... மருத்துவர்கள், நோயாளிகள் கடும் அவதி
- சித்தேரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
- வெள்ள நீரானது மருத்துவமனையை முழுவதுமாக சூழ்ந்தது.
செய்யூர்:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
சித்தேரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த வெள்ள நீரானது மருத்துவமனையை முழுவதுமாக சூழ்ந்தது.
இதனால் மருத்துவமனையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.






