என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'ஊட்டச்சத்தை உறுதிசெய்' திட்டம் வெற்றி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
- மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம்,
- நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம் தான் “ஊட்டச்சத்தை உறுதிசெய்”.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு மாவட்டங்களுக்கு நான் ஆய்வுப் பணிகளுக்கு செல்லும்போது, ஓர் அங்கன்வாடி மையத்தில், மிகவும் மெலிந்த ஒரு குழந்தையைப் பார்த்தேன். அதற்கு காரணம் என்ன வென்று கேட்டபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு என்றார்கள்.
மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று நான் சமாதானம் அடைய விரும்பவில்லை. அந்த நிலையை மாற்ற வேண்டும் என உடனே தொடங்கப்பட்ட திட்டம் தான் "ஊட்டச்சத்தை உறுதிசெய்". இந்த திட்டம் வெற்றி அடைந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Next Story






