என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பா.ஜனதா வாய்க்கு அவல் போடலாமா...? - எடப்பாடி பழனிசாமி
    X

    பா.ஜனதா வாய்க்கு அவல் போடலாமா...? - எடப்பாடி பழனிசாமி

    • அடிக்கடி ஏற்படும் இந்த மோதலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
    • மாநாட்டை பற்றி கேளுங்கள் சொல்கிறேன்’ என்று கறாராக சொல்லிவிட்டார்.

    கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் பா.ஜனதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி உரசல் ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் செல்லூர் ராஜூ பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை அரசியல் கத்துக்குட்டி என்று விமர்சிக்கவும் மீண்டும் இரு கட்சிகளும் முட்டி மோதிக்கொண்டன.

    அடிக்கடி ஏற்படும் இந்த மோதலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. மதுரை மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு மதுரைக்கு சென்றிருந்த எடப்பாடி பழனிசாமி செல்லூர் ராஜூவை கண்டித்துள்ளார்.

    "என்னண்ணே, இப்படி பண்றீங்க? பா.ஜனதா காரங்கதான் ஏதாவது விளம்ப ரத்துக்காக பேசிக்கிட்டே இருக்காங்கன்னா நீங்களும் ஏன் அவுங்க வாய்க்கு அவல் போட்ட மாதிரி பேசுறீங்க? தேவையில்லாமல் பேசுவதை குறையுங்க. முடியலைன்னா ஊடகங்களில் பேசாமல் இருங்கண்ணே' என்று கடிந்துள்ளார். இதனால் நொடிந்து போன செல்லூர் ராஜூ இனி கவனமா இருக்கிறேண்ணே... என்றாராம்.

    சொன்னது போலவே மறுநாள் தன்னை சந்தித்த பத்திரிக்கை யாளர்களிடம் 'அண்ணாமலையா... அதை விடுங்க. மாநாட்டை பற்றி கேளுங்கள் சொல்கிறேன்' என்று கறாராக சொல்லிவிட்டார்.

    Next Story
    ×