என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
போராடும் டாக்டர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
- அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர்.
- அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய விகிதம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் மேட்டூரில் உள்ள மறைந்த அரசு மருத்துவர் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.
அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலமுறை நான் வலியுறுத்தி உள்ளேன். இந்த கோரிக்கைகள் நியாயமானவை என்பதை இன்றைய முதல்-அமைச்சரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் அவற்றை ஏற்க மறுப்பது நியாயமல்ல.
மருத்துவர்களின் உண்ணாநிலை 3-வது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.