search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிட தீர்மானம்
    X

    பாராளுமன்ற தேர்தலில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிட தீர்மானம்

    • தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • வேட்பாளராக களமிறங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

    சென்னை:

    இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி. தலைமை தாங்கினார். கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், பொருளாளர் ஜி.ராஜன் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள், தேர்தல் கூட்டணி நிலைப்பாடு போன்றவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மிச்சாங் புயல் ஏற்படுத்திய வரலாறு காணாத மழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொருள்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் நீண்டகால தேவையை உணர்ந்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கு உதவிட வேண்டும். வடகிழக்கு பருவமழையின் மிக அதிதீவிர மழை பொழிவினால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு, பாரிவேந்தரும், ரவி பச்சமுத்துவும், தங்கள் சொந்த செலவில் பெருமளவு நிவாரண உதவிகள் வழங்கிய தற்காக பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது. பாரிவேந்தர் எம்.பி. வருகிற பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×