search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பணிநீக்க ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஒப்பந்த நர்சுகள் முற்றுகை போராட்டம்
    X

    பணிநீக்க ஆணையை ரத்து செய்யக்கோரி சென்னையில் ஒப்பந்த நர்சுகள் முற்றுகை போராட்டம்

    • கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம்.
    • ஒப்பந்த செவிலியர்களாக 2,472 பேர் பணியாற்றி வந்த நிலையில் அரசின் உத்தரவு எங்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    சென்னை:

    அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நர்சுகள் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் வளாகத்தில் அமர்ந்து கோஷமிட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியும் அந்த ஆணையை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து ஒப்பந்த செவிலியர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறியதாவது:-

    ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்ட நாங்கள் 2019-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம்.

    2 வருடம், 7 மாதங்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்த ரத்து ஆணையை ரத்து செய்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அரசு எங்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ஒப்பந்த செவிலியர்களாக 2,472 பேர் பணியாற்றி வந்த நிலையில் அரசின் உத்தரவு எங்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×