என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
    X

    பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

    • பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகி உள்ள ஆறு பேருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • நாட்டின் உயரிய விருது பெற இருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.

    சென்னை:

    பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வாகி உள்ளவர்களை பாராட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் இருந்து பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வாகியுள்ள பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகி உள்ள கல்யாணசுந்தரம் பிள்ளை (கலை), பாம்பு பிடி வல்லுநர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன் (சமூகப்பணி), பாலம் கல்யாணசுந்தரம் (சமூகப்பணி), கோபால்சாமி வேலுச்சாமி (மருத்துவம்) ஆகிய ஆறு பேருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டின் உயரிய விருது பெற இருக்கும் தாங்கள் அனைவரும் தத்தம் துறைகளில் ஆற்றிய சாதனைகளால் நமது மாநிலத்தைப் பெருமையடையச் செய்துள்ளீர்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×