search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு இடையே சரக்கு ரெயிலில் கொண்டு சென்ற சிமெண்டு தூண்கள் தண்டவாளத்தில் சரிந்தது
    X

    அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு இடையே சரக்கு ரெயிலில் கொண்டு சென்ற சிமெண்டு தூண்கள் தண்டவாளத்தில் சரிந்தது

    • சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.
    • சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

    மதுராந்தகம்:

    மேல்மருவத்தூர்- தொழுப்பேடு இடையே தண்டவாளத்தில் உள்ள சிமெண்டு தூண்களை மாற்றும் பணி கடந்த 10 நாட்களுக்கு மேல் நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சிமெண்டு தூண்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது. அச்சரப்பாக்கம்-தொழுப்பேடு இடையே சென்று கொண்டு இருந்த போது சரக்குரெயிலின் மேல் டிராலியில் இருந்த சிமெண்டு தூண்கள் சரிந்தது. மொத்தம் 3 டிராலிகள் முழுவதும் சரிந்ததால் அதில் இருந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட சிமெண்டு தூண்கள் தண்டவாளத்தில் சரிந்து விழுந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சரக்கு ரெயில் டிரைவர் உடனடியாக ரெயிலை நடு வழியில் நிறுத்தினார். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர்.

    சிமெண்டு தூண்கள் அதிக எடை கொண்டவை என்பதால் உடனடியாக ஊழியர்களால் அகற்ற முடியவில்லை. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதனால் மற்ற தண்டவாளம் வழியாக ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து காலையில் சென்னையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதே போல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ரெயில்கள் அனைத்தும் திண்டிவனம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் வரும் வழியில் நிறுத்தப்பட்டன.

    மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் சென்னையில் இருந்து புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மேல்மருவத்தூர் அருகே பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சிலர் ரெயிலில் இருந்து இறங்கி அங்கிருந்து பஸ்களில் புறப்பட்டு சென்றனர். குறித்த நேரத்துக்கு செல்ல முடியாததால் சென்னை நோக்கி வந்த பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    காலை 11.30 மணி அளவில் சிமெண்டு தூண்கள் முழுவதும் அகற்றப்படு சரக்கு ரெயில் அங்கிருந்து சென்றது.

    சுமார் 5 மணிநேரத்துக்கு மேல் ரெயில் சேவை பாதிக்கப் பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    Next Story
    ×