search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை யாத்திரை: உ.பி. முதல்-மந்திரி மற்றும் 9 மத்திய மந்திரிகள் வருகிறார்கள்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அண்ணாமலை யாத்திரை: உ.பி. முதல்-மந்திரி மற்றும் 9 மத்திய மந்திரிகள் வருகிறார்கள்

    • யாத்திரையின் போது 10 இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
    • கூட்டங்களில் கலந்து கொண்டு பேச 10 மத்திய மந்திரிகளும் வருகை தர உள்ளார்கள்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து பாத யாத்திரை தொடங்கினார். மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். இன்று 5-வது நாளாக யாத்திரை நடக்கிறது.

    முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி வரை யாத்திரை நடக்கிறது. அதன் பிறகு சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த கட்ட யாத்திரை தொடங்கும். மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி 11-ந்தேதி சென்னையில் நிறைவடைகிறது.

    நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த யாத்திரையின் போது 10 இடங்களில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

    இந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேச 10 மத்திய மந்திரிகளும் வருகை தர உள்ளார்கள்.

    உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் சிங் யாதவ், பியூஸ்கோயல், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    Next Story
    ×