search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்கள் விருப்பமான அனைத்து கல்லூரிகளையும் தேர்வு செய்யவேண்டும்- தவறினால் வாய்ப்பு பறிபோகும்
    X

    எம்.பி.பி.எஸ். விண்ணப்பதாரர்கள் விருப்பமான அனைத்து கல்லூரிகளையும் தேர்வு செய்யவேண்டும்- தவறினால் வாய்ப்பு பறிபோகும்

    • மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.
    • சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்.

    சென்னை:

    தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு காத்திருக்கும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க நேற்று முதல் இணையதள பக்கம் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர். அதன்பின்னர் கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்டுகள் சுழற்சி அடிப்படையில் நிறைவேற்றப்படும்.

    இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான அனைத்து கல்லூரிகளையும் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், ஒரு கல்லூரியை விட்டு வெளியேறினால், அதற்கு அடுத்த கட்ட கவுன்சிலிங்கில் அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர முடியாமல் போய்விடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அதாவது ஒரு சுயநிதி கல்லூரியை மாணவர் தேர்வு செய்யவில்லை என்றால், அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் அவர் வேறு எந்த சுயநிதி கல்லூரிக்கும் விண்ணப்பிக்க முடியாது. இதே நிலை அரசு கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை பல்கலை கழகங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த முறை மாணவர் சேர்க்கை தாமதத்திற்கு வழிவகுக்கும் என்றும், மாணவர்கள் விரும்பிய இடங்களில் சேருவதை தடுக்கும் என்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கருத்து கூறுகின்றனர்.

    இதுகுறித்து மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் கூறுகையில், மாணவர்கள் விருப்பபடி கல்லூரிகளை தேர்வு செய்யவில்லை என்றால் அவர்கள் முதல் சுற்றில் வெளியேறுவார்கள். ஆனால் தற்போது அனைத்து கல்லூரிகளையும் தேர்வு செய்ய சொல்லி இருக்கிறார்கள். இதனை தவிர்த்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்ய சொன்னால் நன்றாக இருந்திருக்கும். உதாரணமாக 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் சேரும் விண்ணப்பதாரர்கள், அவர்கள் வேறு தரமான கல்லூரிக்கு செல்ல விரும்பினாலும், அடுத்த சுற்று கவுன்சிலிங்கில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆனால் சீட் வேண்டாம் என நிராகரிக்கும் மாணவர் வைப்பு தொகையை இழக்க நேரிட்டாலும், அடுத்த சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார். கடந்த முறையும் இதேதான் நடந்தது. ஆனால் முடிவில், நிர்வாக பிரிவில் எம்பிபிஎஸ் கல்லூரியை 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் தேர்வு செய்த மாணவனின் மதிப்பெண்ணானது, அரசு ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவனின் மதிப் பெண்ணை விட அதிகமானதாக தோன்றும். இது நியாயம் இல்லாதது என்றார்.

    Next Story
    ×