என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் தனியார் பஸ்களை இயக்கும் முடிவை கைவிடவேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கத்தினர் கடிதம்
    X

    சென்னையில் தனியார் பஸ்களை இயக்கும் முடிவை கைவிடவேண்டும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 9 தொழிற்சங்கத்தினர் கடிதம்

    • 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.
    • தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் 50 ஆண்டுகளாக அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களை இயக்கவும் அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் முதற்கட்டமாக 500 தனியார் பஸ்களை நிபந்தனை அடிப்படையில் இயக்க அரசு வந்துள்ளது.

    இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆளும் கட்சி தொழிற்சங்கமான தொ.மு.ச. கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. சி.ஐ. டி.யூ. தொழிற்சங்கம் நேற்று பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எம்.எல்.எப்., தி.க., பா.ம.க., விடுதலை சிறுத்தை உள்ளிட்ட 9 தொழிற்சங்க கூட்டமைப்பினர் கூட்டாக கையெழுத்திட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    அந்த கடிதத்தில் சென்னையில் தனியார் பஸ்களை இயக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பஸ்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

    ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் இதை மீறும் வகையில் தனியார் பஸ்களை மீண்டும் இயக்க போவதாக வெளிவந்துள்ள அறிவிப்பு எங்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை திரும்புவதால் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் தொழிற்சங்கத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×