search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 15 ரெயில் நிலையங்கள் நவீன வசதியுடன் மேம்படுத்தப்படுகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சென்னையில் 15 ரெயில் நிலையங்கள் நவீன வசதியுடன் மேம்படுத்தப்படுகிறது

    • ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
    • மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    சென்னை:

    அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயில் 90 ரெயில் நிலையங்கள் புதுப்பித்து மேம்படுத்தப்பட உள்ளன.

    இந்த 90 ரெயில் நிலையங்களை கண்டறிந்து அங்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுவதற்கான ஒப்பந்தங்களை ஆலோசகர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தங்களின் விலை ரூ.11.22 கோடியாகும்.

    இது தொடர்பாக தெற்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி குகணேசன் கூறியதாவது:-

    ரெயில்வே பட்ஜெட்டில் ரெயில்வே வாரியம், அம்ரித் பாரத் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதற்காக தெற்கு ரெயில்வே டெண்டர் விடுவதற்காக ரூ.881.42 கோடி நிதி ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறது. தெற்கு ரெயில்வேயின் 6 மண்டலங்களின் கீழ் வரும் 90 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

    சென்னை கோட்டத்தில், கிண்டி, பரங்கிமலை, கடற்கரை, பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், சூலூர்பேட்டை, அரக்கோணம், மாம்பலம், திருத்தணி, ஜோலார்பேட்டை, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு ஆகிய 15 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

    இந்த மேம்படுத்துதல் திட்டத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன. பிளாட்பாரங்களின் உயரத்தை அதிகரிப்பது, பயணிகள் நடந்து செல்லும் நடை மேம்பாலங்களை அகலப்படுத்துதல், குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் 2-வது நுழைவுவாயலை ஏற்படுத்துதல், ரெயில் நிலையங்களின் கட்டமைப்பின் உட்புறங்களை மேம்படுத்துதல், கழிப்பறைகளை புதுப்பித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மொத்தம் 150-க்கும் மேற்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×