search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம்- மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம்- மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    • தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.
    • ஒவ்வொரு மாதமும் மதிப்பூதியத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும் போது, 200 வார்டுகளிலும் பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

    தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.

    அப்போது கமிஷனர் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, பல் மருத்துவா நியமிப்பது நல்ல கோரிக்கை தான். எல்லா மருத்துவமனைகளிலும் பல் மருத்துவர் நியமிக்க பரிசீலிக்கப்படும். காலரா மருத்துவமனை உடனே ஆய்வு செய்யப்படும் என்றார்.

    இதே போல தி.மு.க. கவுன்சிலர் சதிஷ்குமார் பேசும்போது, குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் சார்ஜர் இல்லாமல் வழியில் நின்று விடுகின்றன.

    சார்ஜர் பயன்பாடுகள் அதிகரிக்க வேண்டும். கூடுதலாக வாகனங்கள் பயன்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை இந்த வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீதி வீதியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு கமிஷனர் பதிலளித்து கூறும் போது, 350 பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்படுத்தப்படும். அதன் மூலம் மாநகாட்சி செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பேட்டரி வாகனங்கள் 10 நாட்களில் வரும் என்றார்.

    கூட்டத்தில் மேயருக்கு ரூ.30 ஆயிரம், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரம், மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 9 மாதத்திற்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

    ஒவ்வொரு மாதமும் மதிப்பூதியத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    6 நிலைக்குழு தலைவர்களுக்கும் இன்னோவா கார் வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் சொத்து உரிமையாளர்கள் உரிய காலத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் சுய விவர படிவம் தாக்கல் செய்யாத உரிமையாளர்களுக்கு ரூ. 2ஆயிரம் அபராதம் அல்லது சொத்து வரியில் 5 சதவீதம் சட்டத் திருத்தம், சொத்துவரி நிலுவை வைக்கும் நபர்களுக்கு ஒரு சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும் என்பது உள்பட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×