என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வாக்காளர் அட்டையுடன் 100 சதவீதம் ஆதார் இணைப்பு-  கலெக்டர் பாராட்டு
    X

    வாக்காளர் அட்டையுடன் 100 சதவீதம் ஆதார் இணைப்பு- கலெக்டர் பாராட்டு

    • தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது.
    • சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் தாமோதரனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் வாக்காளர் அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்காளர்களின் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.176-ல் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி 100 சதவீதம் முடிந்துள்ளது.

    இதில் சிறப்பாக பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர் தாமோதரனை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் பாராட்டினார். மேலும் அவருக்கு பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை 100 சதவீதம் இணைக்க வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் அறிவுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஹஸ்வத்பேகம், தேர்தல் பிரிவு தனி வட்டாட்சியர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×