என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் ஒளிவட்டத்துடன் காணப்படும் சூரியன்
- தொடர் விடுமுறை என்பதால் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- திடீரென சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வந்தது. தற்போது மழை குறைந்து இதமான கால நிலை நிலவி வருகிறது. இதமான காலநிலையை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது தொடர் விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அவர்கள், சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.
இன்று காலை முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இதமான கால நிலை நிலவுகிறது. அதிகாலையில் கடும் மேகமூட்டமாக காணப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் ஊட்டி நகரில் வானில் சூரியனை சுற்றிலும் ஒரு ஒளிவட்டம் காணப்பட்டது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊட்டி நகர் மக்கள் இந்த காட்சியை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் மற்றும் சுற்றுலா வந்திருப்போரும் தங்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு சூரியனை சுற்றி காணப்படும் ஒளிவட்டத்தை ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். மேலும் தங்களது செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். திடீரென சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்ததும் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.






