என் மலர்

  தமிழ்நாடு

  காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்: 6 பேரை 2 மணிநேரம் போராடி மீட்ட சப்-இன்ஸ்பெக்டர்
  X

  தண்ணீரில் தத்தளித்த காரை கயிறு கட்டி மீட்ட காட்சி.

  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கார்: 6 பேரை 2 மணிநேரம் போராடி மீட்ட சப்-இன்ஸ்பெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் தரைப்பாலத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் சென்றது.
  • தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் கார் மூழ்கும் சூழல் ஏற்பட்டது.

  வேடசந்தூர்:

  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்றுமாலை முதல் இரவு வரை இடைவிடாது மழை பெய்தது.

  வேடசந்தூரில் இருந்து கரூர் செல்லும் தரைப்பாலத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் சென்றது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வெள்ளோடு பகுதிக்கு சென்றுவிட்டு சண்முகம்(55) என்பவர் காரில் திரும்பி கொண்டிருந்தார். அவருடன் பாலசுப்பிரமணி(16), பாலகிருஷ்ணன்(34), பாண்டியன்(42), செல்வராஜ்(50), மணிக்குமார்(35) ஆகியோரும் வந்தனர்.

  திண்டுக்கல் நோக்கி சென்ற அந்த கார் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து கூச்சலிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் கார் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

  காரில் இருந்த 6 பேரும் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்த நிலையில் டிராக்டரில் கயிரை கட்டி மற்றொரு முனையில் காருடன் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டனர். சுமார் 2 மணிநேரம் தண்ணீருக்குள் தத்தளித்த 6 பேரும் மீட்கப்பட்டதையடுத்து அவர்கள் போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×