என் மலர்

  தமிழ்நாடு

  118-வது பிறந்தநாள் விழா: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர்கள்- தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
  • தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  சென்னை:

  "தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் விழா கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூர் ஆதித்தனார் சாலையில் உள்ள சி.பா.ஆதித்தனார் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

  சிலை முன்பு அவரது உருவப்படம் மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

  சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

  தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

  சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரகுபதி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை இயக்குனர் ஜெயசீலன், கூடுதல் இயக்குனர்கள் சரவணன், அன்பு சோழன், இணை இயக்குனர்கள் மேகவர்ணம், தமிழ் செல்வராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

  தினத்தந்தி, டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., தந்தி டி.வி., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம்கதிர், பாரோஸ் ஓட்டல், மாலைமுரசு ஊழியர்கள் திரளாக வந்து மரியாதை செலுத்தினார்கள்.

  மேலும் மரியாதை செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-

  பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால்கனகராஜ், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் காளிதாஸ், விஜய்ஆனந்த், தனசேகர், நிர்வாகிகள் யமஹகா சுரேஷ், ஈஸ்வரன், மணி, நல்லாங்குப்பம் நாகராஜ், ஜெ.ஜெ.ஆர்.தினேஷ், வக்கீல்கள் டேவிட், வேல்மாரியப்பன், கண்ணன் மற்றும் லதா சண்முக சுந்தரம்.

  காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் மாநில தலைவர்கள் தங்கபாலு, அசன் மவுலானா எம்.எல்.ஏ., மாநில செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர்கள் அடையாறு துரை, சிவராஜசேகரன் மற்றும் கராத்தே ரவி, சூளை ராஜேந்திரன், சரவணன், சூளை ராமலிங்கம், ஏகாம்பரம், செந்தில்குரு, சந்திரசேகர், பெரியமேடு ஜான்சன், ஏசுதாஸ், கொண்டல்தாசன், ஜி.கே.தாஸ், துல் கருணை, முகமது அலி, தணிகாசலம், பெரியமேடு ஜான்சன்,

  தி.மு.க. எம்.பி. கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன் (எழும்பூர்), ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா (விருகம்பாக்கம்), நிவேதா முருகன் (பூம்புகார்), சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் எஸ்.ஆஸ்டின், சிம்லா முத்து சோழன், மடிப்பாக்கம் பகுதி துணை செயலாளர் மடிப்பாக்கம் சிந்தன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், முத்துராமன், கமலக் கண்ணன்,

  சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ஐ.எஸ்.இன்பதுரை, பாபு முருகவேல், மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை வி.என்.ரவி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.விஜயகுமார், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் இ.சி.சேகர், வக்கீல் பிரிவு இணை செயலாளர் இ.சி.எஸ்.பாலாஜி, மாவட்ட இலக்கிய அணி இணை செயலாளர் மலர்மன்னன்

  முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ் ணன், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் எம்.எல்.ஏ. வி.என்.பி.வெங்கட்ராமன், சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி, ராயபுரம் பி.எஸ்.சிவா, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணை தலைவர் கலி பூங்குன்றன்.

  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, கவுன்சிலர் கள் ஜீவன், சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் மகேந்திரன், நன்மாறன், கழக குமார், பகுதி செயலாளர் தென்றல் நிசார், பூங்காநகர் ராமதாஸ்.

  பா.ம.க. இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் ரா.சே.வெங்கடேசன், சுப்பிரமணி, ஏழுமலை மற்றும் துரைராஜ், ஜோதிராஜ், பாலு.

  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, பாலசிங்கம், இரா.செல்வம், சேத்துப்பட்டு இளங்கோ.

  த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., சக்தி வடிவேல், ஜி.ஆர். வெங்கடேஷ், ஆர்.எஸ்.முத்து, கோவிந்தசாமி, முனவர் பாட்சா, சென்னை நந்து, எஸ்.ஆர்.பரத், ஜெ.ஜெ.மோகன், ரவிராஜன், எஸ்.ஆர்.ராமு, பொன்வில்சன், புரசை சார்லஸ்.

  அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி, சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன், கரிகாலன், சுகுமார்பாபு, விருகை சுந்தரராஜன், சித்திக், ராமஜெயம், விதுபாலன், பழனி, ஆனந்த்.

  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில நிர்வாகிகள் ஜெகதீஷ்பாண்டியன், அன்பு தென்னரசு, கதிர் ராஜேந்திரன், அரிமா நாதன், அமுதா நம்பி, கவிஞர் சுமித்ரா, பாக்யராஜ், அகமது பாசில், அய்யனார், டால்பின் ரவி.

  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் டி.மகாலிங்கம், துணை பொதுச் செயலாளர் ஜி.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளர்கள் ஆண்டனி, பொன்னரசன், பொன்வேல், கார்த்திக், குருமூர்த்தி, மணலி பாலா, எழும்பூர் பகுதி செயலாளர் சரத் வெங்கடேஷ், திரு.வி.க. நகர் பகுதி செயலாளர் ஏழுமலை, வட்டச் செயலாளர்கள் மணிமாறன், ஆறுமுகம், தென்சென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலசுந்தர்.

  பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மாநில வர்த்தக அணி தலைவர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், மாநில செய்தி தொடர்பாளர் ஜி.சந்தானம், சென்னை மேற்கு மாவட்ட தலைவர் எம்.வைகுண்டராஜா, உயர்மட்ட குழு உறுப்பினர் டி.உதயகுமார், தென் சென்னை வடக்கு மாவட்ட அமைப்பாளர் பொன்.அருணாசல பாண்டியன், தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலமுருகன், மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் வி.பி.ஐயர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் புரசை சி.நாகராஜ், வடசென்னை மாவட்ட செயலாளர் ஜி.ராபர்ட், தி.நகர் தொகுதி தலைவர் எம்.எம்.டி.ஏ.பால முருகன், விருகம்பாக்கம் தொகுதி தலைவர் கே.மணிராஜ், வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஏ.பொன்ராஜ், குன்றத்தூர் ஒன்றிய தலைவர் ஏ.சி.தர்மராஜ்.

  சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து, தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட செயலாளர் பாஸ்கர், தொகுதி செயலாளர் ராஜேஷ், நாடார் பேரவை மாவட்ட செயலாளர் சீனிவாசன், பாக்யராஜ், சங்கர பாண்டி, வேல்முருகன்.

  தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மாவட்ட செயலாளர்கள் வாசுதேவன், முத்துராஜ், மதுரவாயல் பகுதி தலைவர் சதீஷ், துணை அமைப்பாளர் பி.தாமு, இளைஞர் அணி செயலாளர் கோ.அருண், பொருளாளர் நடராஜன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் பி.விக்னேஷ்.

  புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், அமைப்புச் செயலாளர்கள் பழனி, செல்வம், ஏ.சி.எஸ். பேரவைத் தலைவர் சுதர் சன், லோகநாதன், நடராஜன், தனசேகர், ராதாகிருஷ்ணன், ஏ.வி.மணி, சங்கர், முருகப்பெருமான், வேலாயுதம், ஐயாகண்ணு, சண்முகம், ஆனந்தன், தீர்த்தகிரி, வெங்கடேசன்.

  இந்து முன்னணி மாநில செயலாளர் மணலி மனோகர், மாநகர தலைவர் இளங்கோவன், சிவ விஜயன், தங்கராஜ்.

  அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழக நிறுவனர் டாக்டர் முத்துராமன் சிங்கப்பெருமாள், மாநில பொதுச்செயலாளர் ஞானப்பிரகாசம், மாநில செயலாளர் கந்தசாமி, தாமஸ், ராஜசேகர், சுந்தர்ராஜன், சுரேஷ், புதுச்சேரி மாநில செயலாளர் சேகர், ஆசைதம்பி, சிலம்பரசன், ராஜ்குமார், சக்திவேலன், கிருஷ்ணன், பரந்தாமன், குமரேசன், ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், கொழுந்தியப்பன், மணிகண்டன், பழனிசாமி, பிரதீப்.

  அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தலைவர் இசக்கிமுத்து, மாநில தலைவர் மணியரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

  Next Story
  ×