என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் கஞ்சா மூட்டையை காணலாம்.
வேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 300 கிலோ கஞ்சா பறிமுதல்- 6 பேர் கைது
- தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் ரெயில்வே கேட் அருகே காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் தனிப்படை போலீசார்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அதில் கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி அதனை காரின் மூலம் மதுரை வழியாக வேதாரணியம் கொண்டு வந்து இலங்கைக்கு கடத்த இருப்பது தெரிய வந்தது.
இந்த கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக அகஸ்தியம்பள்ளியை சேர்ந்த ரவி, கோடியக்காட்டை சேர்ந்த லட்சுமணன், சேத்தாகுடி சேர்ந்த ரவி, வேதமணி, மதுரை சேர்ந்த மாயகிருஷ்ணன், பெரம்பலூரை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். கடத்தலில் சிக்கிய கஞ்சாவின் எடை சுமார் 300 கிலோ. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சமாகும்.






