search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- செங்கோட்டையன் பேட்டி
    X

    ஈரோடு இடைத்தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்- செங்கோட்டையன் பேட்டி

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும்.
    • நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கிழக்கு தொகுதி தேர்தல் பணி களத்தில் அ.தி.மு.க.வின் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேர்தல் களம் கண்டவர்கள். எனவே தேர்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். அ.தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கை எட்டுவதற்கு அயராது பணிகளை செய்து வருகிறோம்.

    எனவே எங்களது களப்பணி என்பது வரலாற்றில் இல்லாத வகையில் அமைய உள்ளது. அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளை அழைத்துப் பேசி 2 முறை வழங்கியுள்ளார். மேலும் வெற்றி என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பாராளுமன்ற தேர்தல் வர உள்ளதால் இந்த தேர்தல் செங்கோட்டை வியக்கத்தக்க அளவிற்கு எதிர்காலத்தில் மாற்றத்தை உருவாக்க இருக்கிறது. இந்த குரல் டெல்லி செங்கோட்டைக்கு ஒலிக்க இருக்கிறது.

    அ.தி.மு.க. எத்தனை அணிகளாக பிரிந்து இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்திருப்பதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அவர்கள் (தி.மு.க) மாடியில் இருந்து மக்களை பார்கிறார்கள், அ.தி.மு.க.வினர் மக்களோடு இருந்து மக்களை பார்கிறோம். வெற்றி என்பது எங்கள் லட்சியத்தின் இலக்காக உள்ளது.

    ஒவ்வொரு இயக்கத்தினரும் தங்களுக்கான கொள்கை முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் ஆட்சி மன்ற குழு தலைநகரில் தான் நடைபெறும். பிரச்சாரத்திற்கு தடைகள் இல்லை. அ.தி.மு.க மெகா கூட்டணியுடன் இணைந்து பிரச்சார பணிகளை மேற்கொள்ள உள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மூலம் வேட்பாளர் அறிவிக்கப்படும்போது களம் இன்னும் வேகமாக இருக்கும். ஆதரவு கேட்ட கட்சியின் நிலைப்பாடு குறித்து 2, 3 நாட்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்கள் வீடு வீடாக சென்று களப்பணி ஆற்றும்போது மாற்றம் தேவை என வெளிப்படையாக மக்கள் கூறி வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×