என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட்-  கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி செல்பி பாயிண்ட்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது.
    • கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜீலை 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் 100 சதவீதம் வாக்களிக்கும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் ஒரு விரல் உருவம் பொருத்திய செல்பி பாயிண்ட் வைக்கப்பட்டடுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மதியம் நடைபெற்றது.

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி கலந்து கொண்டு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட்டில் உள்ள ஏறி நின்று ஒரு விரல் உயர்த்தி செல்பி எடுத்துக்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தனி தாசில்தார் ஜெயலட்சுமி, விக்கிரவாண்டி தாசில்தார் யுவராஜ், வருவாய் ஆய்வாளர் தெய்வீகன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாமலை, சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×