search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடை நீக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு உற்சாகமாக கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
    X

    தடை நீக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்திற்கு பிறகு உற்சாகமாக கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார்.
    • மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் சூறை காற்று வீசியதால் மீனவர்களின் பாதுகாப்பு கருதி மீன்பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையினர் தடை விதித்தனர். இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, கீழக்கரை, ஏர்வாடி என ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் ஒரு வாரமாக அந்தந்த துறை முகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒரு வாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகினார். இந்நிலையில் வங்க கடலில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.

    இதனைதொடர்ந்து ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    ஒரு வாரம் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து நிலையில் இன்று மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகளவில் இறால் மீன்கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    Next Story
    ×